முதல்வரின் இலாக்கக்கள் ஓ.பி.எஸ்க்கு மாற்றப்பட்டது சாதாரண் விஷயம்தான் – பொன்.இரா…

Asianet News Tamil  
Published : Oct 13, 2016, 12:37 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
முதல்வரின் இலாக்கக்கள் ஓ.பி.எஸ்க்கு மாற்றப்பட்டது சாதாரண் விஷயம்தான் – பொன்.இரா…

சுருக்கம்

முதல்வர் வசம் இருந்த இலாக்காக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செலத்துக்கு மாற்றப்பட்டது சாதாரண விஷயம்தான் என்று பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மதுரை விமானநிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார்.

முதலமைச்சர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் தற்காலிக முதல்வர் நியமிக்கப்பட வேண்டும் என்று அறிவித்திருந்தார்.

அவரைப் போன்றே மற்ற தலைவர்களும், அரசு நிர்வாகம் தடையின்றி நடக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தன்ர்.

அதன் தொடர்ச்சியாக, ஓ.பி.எஸ் தலைமையில், ஆளுநரைச் சந்தித்து முதல்வரின் இலாக்காவை ஓ.பி.எஸ் கவனிப்பார் என்று விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. அதனை, ஆளுநரும் ஒப்புக் கொண்டதின் பேரில், முதலமைச்சர் ஜெயலலிதா வசம் இருந்து வந்த இலாகாக்கள் அனைத்தும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இது பற்றி, பொன்.இராதாகிருஷ்ணனிடம் செய்தியாளார்களிடம் கேட்டனர்.

அதற்கு அவர், “இது ஒரு சாதாரண விஷயம்தான். சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் நிர்வாக வசதிகளுக்காகவும் ஜெயலலிதாவிடம் இருந்த இலாகாக்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் மாற்றப்பட்டுள்ளது. அவ்வளவுதான் என்று கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலினை கதறவிடும் கூட்டணி கட்சிகள்.. மைனாரிட்டி ஆட்சி..? திமுகவுக்கு இரண்டே ஆப்ஷன்..!
அடங்கிப் போகும் ஆளா நானு..? அடிமையா இருக்க அரசியலுக்கு வரல... விஜய் பரபரப்பு பேச்சு