என் பணியை இளைஞர்களை நம்பி விட்டுச் செல்கிறேன்... பொன். மாணிக்கவேல் உருக்கம்!

By sathish kFirst Published Nov 29, 2018, 10:01 PM IST
Highlights

ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நாளையுடன் ஓய்வுபெறும் நிலையில் அவருக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் சிறப்பு மரியாதை தரும் நிகழ்ச்சியை நடத்தினர். பொன்மாணிக்கவேல் நாளை வேலையிலிருந்து ஓய்வு பெரும் நிலையில் திருட்டு கும்பல் செம்ம குஷியில் இருப்பார்கள்.

தமிழக ரயில்வே காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவையும் கவனித்து வருகிறார். வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் பதுக்கப்பட்ட தமிழக சிற்பங்களையும், களவாடப்பட்ட கோவில் சிலைகளையும் அவர் மீட்டெடுத்து கோவில்களிலேயே மீண்டும் கொண்டு சேர்த்தார். பணிக்காலம் முடிவடைவதை அடுத்து நாளையுடன் அவர் ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு படையினர், ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு சிறப்பு மரியாதை தரும் நிகழ்ச்சியை பெரம்பூரில் நடத்தினர். அப்போது ரயில்வே பாதுகாப்பு படையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பொன்மாணிக்கவேல் வெகுமதி அளித்து பாராட்டினார். அத்துடன் குற்றச்சம்பவங்களின் போது காவலர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகளையும் வழங்கினார்.

 காவலர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். குற்றங்களை பதிவு செய்யும் போது 9 mm துப்பாக்கியை பயன்படுத்துவதை விட 90 mm அளவுள்ள மொபைலில் பதிவு செய்வதே சிறந்தது என சுட்டிக்காட்டினார்.
 

click me!