மீண்டும் புஸ்ஸுன்னு குறைந்த பெட்ரோல், டீசல் விலை....! மக்கள் மகிழ்ச்சி....!

By thenmozhi gFirst Published Nov 28, 2018, 2:25 PM IST
Highlights

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.35 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 72.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 53 காசுகள் குறைந்து, டீசல் விலை 43 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.35 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 72.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 53 காசுகள் குறைந்து, டீசல் விலை 43 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த இரண்டு மாதங்கள் முன் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருந்தது.. இன்னும் சொல்லப்போனால் பெட்ரோல் விலை ரூ. 100 தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனை கண்டித்து மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரஸ் நாடு முழுக்க ஒருநாள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தியது. 

தொடர் விலை உயர்வுக்கு காரணம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு.... இதனை தொடர்ந்து தற்போது தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு ஆகியவற்றின் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருந்து வருகிறது. அதன்படி பார்த்தால், கடந்த ஒரு மாத கால அளவில் டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய்கும் மேல் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை..!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.35 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 72.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 53 காசுகள் குறைந்து, டீசல் விலை 43 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!