பொள்ளாச்சி அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதல்... 3 இளைஞர்கள் உயிரிழப்பு

Published : Nov 16, 2018, 04:33 PM IST
பொள்ளாச்சி அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதல்... 3 இளைஞர்கள் உயிரிழப்பு

சுருக்கம்

பொள்ளாச்சியில் கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பொள்ளாச்சியில் கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தலைக்கவசம் அணியாமல் ஒரே இருசக்கர வாகனத்தில் 3 இளைஞர்களும் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த பாபு (20), பாரதி (20), ராஜு (19) மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். 

அப்போது தாமரைக்குளம் பகுதி அருகே சென்ற போது கார் மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

தகவலறிந்து வந்த கிணத்துக்கடவு காவல்துறையினர், உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

கதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்
ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?