
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப் பெற்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்வதற்காக சென்னை போலீசார் காத்திருக்கின்றனர். அதற்கான உத்தரவையும் போலீசார் எதிர்பார்த்துள்ளனர்.
நீதிபதிகள் மீது ஊழல் குற்றசாட்டு சுமத்தியது தொடர்பான வழக்கில் உச்சநிதிமன்ற நீதிபதிகளின் கண்டனத்திற்கு ஆளான நீதிபதி கர்ணன், எச்சநீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவுப்படி மன நல பரிசோதனைக்கு மறுத்துவிட்டதோடு அதற்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் 8 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து நீதிபதி கர்ணன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், அவருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்நிலையில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நீதிபதி கர்ணன் கொல்கத்தாவில் இருந்து நேற்று சென்னைக்கு வந்தார். அவர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி இருக்கிறார்.
இதனிடையே நீதிபதி கர்ணனை கைது செய்வதற்காக சென்னை போலீசார் காத்திருக்கின்றனர். அதற்கான உச்சநிதிமன்ற உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நீதிபதி கர்ணன் கைது செய்யப்படுவாரா ? அவர் மீது வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது? கர்ணன் சிறையில் அடைக்கப்பட்டால் ஜாமீனில் வர சம்மதிப்பாரா ? என பல கேள்விகள் எழுந்துள்ளன.
வரும் ஜுன் மாதம் 11 ஆம் தேதி நீதிபதி கர்ணன் ஓய்வு பெறவுள்ளார்.அதற்குள் அவர் கைது செய்யப்பட்டால் ஓய்வு பெற்ற பின்னரும் 5 மாதங்கள் வரை சிறையில் இருக்க வேண்டியது வரும்.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் கர்ணன் என்ன செய்யப் போகிறார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.