ஜெ. நினைவிடத்தில் மொட்டை போட்ட போலீஸ்காரருக்கு கட்டாய ஓய்வு… சசிகலாவை விமர்சித்ததால் நடவடிக்கை…

 
Published : Apr 01, 2017, 09:11 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
ஜெ. நினைவிடத்தில் மொட்டை போட்ட போலீஸ்காரருக்கு கட்டாய ஓய்வு… சசிகலாவை விமர்சித்ததால் நடவடிக்கை…

சுருக்கம்

police velmurugan suspended due to opposed sasikala

சசிகலா முதலமைச்சராக பதவியேற்கக் கூடாது என விமர்சனம் செய்து புகழ் பெற்ற தேனி போலீஸ்காரருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஓடைப்பட்டிகாவல் நிலையத்தில் காவலராக பணியாற்றியவர் வேல் முருகன். கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2002 வரை ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திலும் வேல் முருகன் பாதுகாப்பு பணியிலும் இருந்துள்ளார்.

இவர் பணியில் இருந்தபோது இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் 10 மணி நேரம் நீந்தி கின்னஸ் சாதனை படைத்தார்,. இதில் கிடைத்த 7 லட்ச ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ஜெயலலிதாவிடம் வழங்கினார்.

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோது தேனியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். அவர் விடுதலையானவுடன் மொட்டை போட்டுக்கொண்டார்.

ஜெயலலிதா மரணமடைந்தவுடன் ஓபிஎஸ் ஆதரவாளராக மாறினார். சசிகலா முதலமைச்சராக பதவியேற்க கூடாது என பகிரங்கமாக தெரிவித்தார், ஜெ மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.

வேல் முருகன் தொடர்ந்து சசிகலாவுக்கு எதிராக விமர்சனம் செய்த வந்த நிலையில் நேற்று அவருக்கு கட்டாய ஓய்வு அளித்து தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கர் உத்தரவிட்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேல் முருகன், தன்னை தமிழக அரசு பழி வாங்குவதாக குற்றம்சாட்டினார். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ. நினைவிடத்தில் வைத்து சபதம் ஏற்கப்போவதாகவும்,.

ஆர்,கே,நகர் தொகுதியில் தினகரனுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் தெரிவித்தார். ஆனால் ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் ஜெயித்துவிட்டால் ஜெ.நினைவிடத்தில் தற்கொலை செய்து கொள்ளப் போதாகவும் தெரிவித்தார்..

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!