கடப்பாறை... தீயணைப்பு வண்டி... கதி கலங்கும் சவுக்கு சங்கர் வீட்டு ஏரியா.. எந்த நேரமும் அரெஸ்ட்

Published : Dec 13, 2025, 12:45 PM IST
Savukku Shankar

சுருக்கம்

தொடந்து கதவை திறங்கள் என்று காவலர்கள் அறிவுறுத்தியும் சவுக்கு சங்கர் கதவை திறக்கவில்லை. இதனால் அங்கு தீயணைப்பு வாகனம் மூலம் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் இவர் திமுக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். குறிப்பாக திமுக அரசின் ஊழல், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பரபரப்பு கருத்துகளை கூறி வருகிறார். இதன் காரணமாக சவுக்கு சங்கர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன.

சவுக்கு சங்கரை கைது செய்ய வந்த காவல்துறை

இந்த நிலையில், சவுக்கு சங்கர் மற்றும் அவரது சேனலில் வேலை பார்க்கும் பெண் நெறியாளர் மாலதி என்பவரையும் கைது செய்ய 20க்கும் மேற்பட்ட சென்னை காவல்துறையினர் இன்று சவுக்கு சங்கர் வீட்டை முற்றுகையிட்டுள்ளதாக அவர் இன்று காலை பரபரப்பு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

என்ன வழக்கு?

அதாவது ரெட்டன் ஃபாலோ ஒரு படத்தின் தயாரிப்பாளர் புருஷோத்தமன் என்பவர் 30.06.2025 அன்று தனது அலுவலகத்திற்கு வந்து அவரை தவறாக பேசிய வீடியோவை நீக்கும்படி தனது அலுவலகம் வந்து தன்னிடம் கோரிக்கை விடுத்ததாகவும், இதை நாங்கள் மறுத்து தானும், மாலதி மற்றும் அலுவலகத்தில் இருந்தவர்கள் அவரை அடித்து அவர் கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை பறித்து விட்டதாகவும் ஆதம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தன்னையும், மாலதியையும் கைது செய்ய வந்திருப்பதாக சவுக்கு சங்கர் வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

கதவை திறக்காத சவுக்கு சங்கர்

ஆனால் சவுக்கு சங்கர் வீட்டின் கதவை திறக்கவில்லை. எனது வழக்கறிஞர்கள் வந்தால் தான் கதவை திறப்பேன் என சவுக்கு சங்கர் உறுதியாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் வீட்டுக்கு வழக்கறிஞர்கள் வந்த நிலையில், அவர்களிடம் சம்மன் அல்ல; கைது செய்ய வந்திருக்கிறோம் என்று மீனம்பாக்கம் உதவி ஆணையர் கூறியதாகவும் சவுக்கு சங்கர் எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டார்.

தீயணைப்பு வாகனமும் வந்தது

தொடர்ந்து இரண்டு போலீஸ் வேன்களில் 20 காவலர்கள் சவுக்கு சங்கர் வீடு முன்பு சுற்றி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடந்து கதவை திறங்கள் என்று காவலர்கள் அறிவுறுத்தியும் சவுக்கு சங்கர் கதவை திறக்கவில்லை. இதனால் அங்கு தீயணைப்பு வாகனம் மூலம் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

கதவை உடைக்கும் தீயணைப்பு வீரர்கள்

கையில் கடப்பாறையுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் லிப்ட்டில் ஏறி சவுக்கு சங்கர் வீட்டுக்கு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. கடப்பாறைகளோடு வந்த தீயணைப்பு வீரர்கள் எனது வீட்டின் கதவை உடைக்க இருக்கின்றனர் என்று சவுக்கு சங்கர் மற்றொரு வீடியோவும் வெளியிட்டு இருக்கிறார். காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கொலைக்கான பின்னணி.. எதிர்பாராத ட்விஸ்ட்.. போலீஸ் அதிர்ச்சி.!
அதிகாலையில் சவுக்கு சங்கர் வீட்டிற்கு சுத்துபோட்ட போலீஸ்! மொத்த டீமும் கைது.? பின்னணி என்ன?