
சென்னையில் சொந்த வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை மடிப்பாக்கம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் கம்பால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். இதை கேட்க வந்த பொதுமக்களிடம் பெரம்பை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் அருகே வாலிபர் ஒருவர் அவரது வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தார். அப்போது ரவுண்ஸ் வந்த மடிப்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இங்கு ஏன் நிக்குற உள்ளே போ என அவர் கையில் வைத்திருந்த பெரம்பால் அடித்து துரத்தியுள்ளார்.
இதைபார்த்த இளைஞர்கள் ஒன்று கூடி ஏன் வீட்டு வாசலில் நிற்க கூடியவர்களை உள்ளே துரத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
அதற்கு வாசலில் நிற்க கூடாது வீட்டின் உள்ளே தான் இருக்க வேண்டும் என வாலிபரின் உறவினர்களையும் நண்பர்களையும் சப் இன்ஸ்பெக்டர் மிரட்டியுள்ளார்.
அங்கே நடந்தவற்றை ஒருவர் வீடியோ எடுத்து கொண்டிருந்தபோதும் அதை பெரிது படுத்தாமல் மிரட்டும் தோனியில் பேசியுள்ளார் சப் இன்ஸ்பெக்டர்.
சிறிது நேரம் கழித்து வீடியோ எடுத்து கொண்டிருந்தவரின் மொபைலை பிடுங்க முற்பட்டு மிரட்டியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனால் வீட்டின் வாசலில் நிற்பது கூட தவறு என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார் மடிப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர்.