
திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக வேலை பார்த்தவர் பாலகிருஷ்ணன் (51). கடந்த 10ம் தேதி காவல் நிலையதில், இரவுப்பணியில் இருந்த முதல்நிலை காவலராக உள்ள சசிகலா என்ற பெண் காவலரிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோ வெளியானது.
இந்த வீடியோ வைரலாக பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது- இதையடுத்து எஸ்பி ஜியாவுல் ஹக், சிறப்பு எஸ்ஐ பாலகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையில், சம்பவம் நடந்தபோது இருவரும் பணியில் இருந்தனர். இதையொட்டி 2 பேரிடமும் ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய வீடியோ காட்சி, சுமார் 2 நிமிடம் 50 விநாடிகள் பதிவாகி இருந்தது. அதில் எஸ்எஸ்ஐ பாலகிருஷ்ணன், காவல் நிலையம் வந்ததும், அந்த பெண் காவலர் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதுபோல் பதிவாகியிருந்தது. மேலும், பெண் காவலர் சசிகலா, தனது இருக்கையை விட்டு எழவில்லை. எஸ்எஸ்ஐ பாலகிருஷ்ணன் முத்தம் கொடுத்தபோது, எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதனால் இச்சம்வம், காவலர் சசிகலாவின் சம்மதத்துடன் நடந்து இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த வேளையில், புகார் அளித்த பெண் காவலர் சசிகலா, மருத்துவ விடுப்பு பெற்றுக் கொண்டு விடுமுறையில் சென்றுள்ளார். இதைதொடர்ந்து டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், முசிறி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, பெண் காவலர் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறிய தகவல்கள் மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக்கிடம் தெரிவிக்கப்பட்டது.
பெண் காவலர் அளித்த தகவலின் அடிப்படையில், சோமரசம்பேட்டை போலீசில், எஸ்எஸ்ஐ பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் போலீசை பணி செய்யவிடாமல் தடுத்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல், மிரட்டல் விடுத்தல் என்ற 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர். ஆனால் தன் மீது மட்டும் நடவடிக்கை ஏன்? அவரின் சம்மதத்துடன் தான் முத்தம் கொடுத்தேன் என எஸ்எஸ்ஐ பாலகிருஷ்ணன் கூறியளதாக தெரிகிறது.ஆனாலும், அவர் புகார் கொடுக்கவில்லை. பெண் காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகிறது.