
ஏட்டுவை கொலை செய்ததால் போலீசார் என்னை கைது செய்ய பிடிக்க வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என முக்கிய குற்றவாளியை நெருங்கிய சூழலில் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டலால் தனிப்படைகள் தவித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள கீழ சிந்தாமணியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்துரை. விஜயநாராயணம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்தார்.
கடந்த 7ம் தேதி நள்ளிரவு விஜயநாராயணம் அருகே பாண்டிச்சேரி பகுதி நம்பியாற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அதிகாலை 1 மணியளவில் ஏட்டு ஜெகதீஷ்துரை பைக்கில் ரோந்துக்கு சென்றார். அப்போது டிராக்டரில் மணல் கடத்திச் சென்றவர்களை பிடிக்க முயன்ற போது, 4 பேர் கும்பல் அவரை இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியது.
இந்த கொலை வழக்கை விசாரிக்க விஜயநாராயணம் போலீசாரை உள்ளடக்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதுதொடர்பாக அருகேயுள்ள பாண்டிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், முருகபெருமாள், மணிக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். முருகபெருமாள், நாகர்கோவிலில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். முக்கிய குற்றவாளியான முருகன், கல்மாணிக்கபுரத்தைச் சேர்ந்த மணி, மணல் தரகர் சேர்மத்துரை, ராஜாரவி, தங்கவேல், அமிதாப்பச்சன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
இவர்களது நண்பர்களிடம் விசாரணை செய்ததில், முக்கிய குற்றவாளியான முருகன், எட்டுவி கொலை செய்ததற்காக போலீசார் தன்னை நெருங்கினால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என என தனது நண்பர்களிடம் செல்போனில் தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே முருகனை எச்சரிக்கையாக பிடிக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதன்பேரில் தனிப்படைகள் அவர் இருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.