பழனி கோயிலை சுற்றி திடீரென குவிந்த நூற்றுக்கணக்கான போலீசார்..! இரவு முழுவதும் தொடர்ந்த சோதனை- காரணம் என்ன.?

Published : Jul 16, 2023, 07:44 AM IST
பழனி கோயிலை சுற்றி திடீரென குவிந்த நூற்றுக்கணக்கான போலீசார்..! இரவு முழுவதும் தொடர்ந்த சோதனை- காரணம் என்ன.?

சுருக்கம்

பழனியில் நள்ளிரவில் நூற்றுக்கணக்கான போலீசார் அந்த பகுதியில் உள்ள தங்கு விடுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனையின் போது விடுதிகளில் ஏதேனும் குற்றசம்பவங்கள் நடைபெறுகிறதா என விசாரணை செய்யப்பட்டது. 

பழனியில் திடீர் சோதனை

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் விடுமுறை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடுதிகளில் தங்கி மறுநாள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் சனிக்கிழமை ஆன நேற்று  வருகை தரும் பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் சாமி தரிசனம் செய்வதற்காக தங்கம் விடுதிகளில் தங்கி உள்ளனர். இந்நிலையில் பழனி டிஎஸ்பி சரவணன் தலைமையில் 5 குழுக்களாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தங்கும் விடுதிகளில் விடுமுறை நாளை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் பெறுகிறார்களா என்றும் ,

விடுதிகளில் விபச்சாரமா.?

தனி நபர்களை தங்க வைக்கப்பட்டுள்ளார்களா என்றும் விடுதிகளில் விபச்சாரம்  செய்யப்படுகிறதா என்றும் பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது முறையாக தங்கும் விடுதிக்கு அனுமதி பெறாமல் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டப்பட்டுள்ளது. பழனி நகர் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் , தாலுகா காவல் ஆய்வாளர்கள் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என ஐந்து குழுக்களாக பிரிந்து ஒரே நேரங்களில் இரவு 12 மணிக்கு நூற்றுக்கணக்கான போலிசார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பழனியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்

திமுக எம்.எல்.ஏவையே அலறவிட்ட மர்ம கும்பல்..! நிர்வாண வீடியோ அனுப்பி மிரட்டி பணம் பறிப்பு-நடந்தது என்ன.?

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!