பாஜக நிர்வாகி படப்பை குணாவை தட்டி தூக்கிய போலீஸ்... மீண்டும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

By Ajmal Khan  |  First Published Dec 17, 2023, 7:38 AM IST

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பாஜகவில் இணைந்த படப்பை குணாவுக்கு பாஜகவில் மாவட்ட OBC பிரிவு தலைவராக பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், வழிப்பறி வழக்கில் கைது செய்த போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.


பாஜகவில் இணைந்த ரவுடி படப்பை குணா

தமிழக பாஜகவில் ரவுடிகள் மற்றும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்ந்து இணைந்து வருவதாக விமர்சனங்கள் வந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் படப்பை குணா என்கிற குணசேகரன் பாஜகவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணைந்தார். இவருக்கு அடுத்த சில நாட்களிளையே பாஜகவில் மாவட்ட OBC பிரிவு தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், யார் இந்த படப்பை குணா என்ற தகவல் வெளியானது. பிரபல ரவுடியான  குணா (எ) படப்பை குணா மீது  சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு\காவல்நிலையத்தில் கொலை , கொலை முயற்சி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 42க்கும் மேற்பட்ட  வழக்குகள் நிலுவையில் உள்ளன.

குண்டர் சட்டத்தில் கைது

போலீசார் படப்பை குணாவை என்கவுண்டர் செய்ய திட்டமிட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து ஜாமின் பெற்று வெளியே வந்த படப்பை குணா மீண்டும் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில்,  சுங்குவார்சத்திரம் அடுத்த பாப்பாங்குழி பகுதியில் விமல் என்கிற இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.  தற்போது  படப்பை குணா மீது ஒழுங்கு நடவடிக்கை மீறியதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

நெடுங்குன்றம் சூர்யாவை தொடர்ந்து பிரபல ரவுடி படப்பை குணாவிற்கு பாஜகவில் முக்கிய பதவி..!

click me!