
கீழ் மொரப்பூர் காப்புக்காட்டில் வேட்டையாடிய மானின் கறியை வனத்தில் உட்கார்ந்து அறுத்துக் கொண்டிருந்த இருவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தர்மபுரியில் வனத்துறையினர் கீழ்மொரப்பூர் காப்புக்காடு பகுதியில் சுற்றுப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சுற்றுப் பணிக்கு மொரப்பூர் வனச்சரகர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
அப்போது, தென்பெண்ணையாறு சரகத்தில் இரண்டு பேர் மானை வேட்டையாடி கறியை அறுத்துக் கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், “அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வெள்ளிமலை கிராமத்தைச் சேர்ந்த அல்லிமுத்து (27), வேலூர் மாவட்டம் வெல்லண்டராமம் கிராமத்தை சேர்ந்த கோபி (19) என்பது தெரிய வந்தது.
இவர்கள் இரண்டு பேரும் வனப்பகுதியில் மானை வேட்டையாடியதை ஒப்புக் கொண்டதால் அவர்கள் இருவரையுன்ம் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிலோ மான் கறி, கத்தி, கம்பி வலை ஆகியவற்றை கைப்பற்றினர்.