பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமை திறந்துவைத்து ஆட்சியர் ஆவேச பேச்சு…

 
Published : Apr 03, 2017, 10:14 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமை திறந்துவைத்து ஆட்சியர் ஆவேச பேச்சு…

சுருக்கம்

Disaster Management Training camps open collector angry speech

கன்னியாகுமரில் பேரிடர் மேலாணமை பயிற்சி முகாமை திறந்து வைத்து ஆட்சியர் சஜ்ஜன்சிங், “இடர்பாடுகளின்போது முதல் உதவியாளர்களின் பணியே முக்கியமானது” என்று ஆவேசமாக பேசினார்.

இரட்சண்ய சேனையின் சமூக நல மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் இந்திய செஞ்சிலுவை சங்கம் இணைந்து மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் இரட்சண்ய சேனை உறுப்பினர்களுக்கான பயிற்சிமுகாம் நாகர்கோவில் பெருமாள் திருமண்டபத்தில் நடந்தது.

இந்த முகாமில், பேரிடர் மேலாண்மை, இயற்கை மாற்றங்கள் மற்றும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியை ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தலைமைத் தாங்கி தொடங்கி வைத்தார். கேரள மாநில கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் மைக்கேல் வேதா சிரோமணி முன்னிலை வகித்தார்.

இந்த பயிற்சியில் ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் பேசியது:

“கன்னியாகுமரி மாவட்டம் பேரிடர் மேலாண்மை, இயற்கை மாற்றங்கள் மற்றும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது உடனடியாக முதல் உதவியாளர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

அவசர கால இலவச தொலைபேசி எண்ணான 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.

இயற்கை இடர்பாடுகள் ஏதேனும் ஏற்படும்போது அதில் சிக்கியுள்ள நபர்களை வீட்டிலுள்ள பொருட்களை வைத்து பாதுகாப்பாக எவ்வாறு மீட்டெடுக்க வேண்டும் என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நமது மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளிலும் முதல் உதவியாளர்கள் உள்ளார்கள். குறிப்பாக சுனாமி, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை இடர்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக திட்ட கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் – 1 மற்றும் சிற்றார் – 2 ஆகிய அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் போது குழித்துறை, திருவட்டார், முன்சிறை ஆகிய மூன்று இடங்களில் 8 கி.மீ. தூரத்துக்கு ஒலி எழுப்பக்கூடிய சைரன் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம், தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் நபர்களுக்கும், தாழ்வான பகுதியில் உள்ள நபர்களுக்கும் எச்சரிக்கை அளிக்கப்படும்.

மேலும், 200 மி.மீ.க்கு மேலாக மழை தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்யும்போது, வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அணைகளில் நீர் உள்வருவதையும், வெளியேற்றப்படுவதையும் தொடர்ந்து பொதுப்பணித்துறை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நமது மாவட்டத்தில் ஏதேனும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் போது பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக 65 தற்காலிக தங்குமிடங்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், முதல் உதவியாளர்களின் பணியானது மிகவும் முக்கியமானது.

எனவே, முதலுதவியாளர்களாகிய நீங்கள்தான் இயற்கை இடர்பாடுகளை நேரடியாக பார்ப்பதோடு, உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க முடியும். நீங்கள் என்றும் தயார் நிலையில் இருந்து மனித உயிர் இழப்பு ஏற்படுவதை தடுக்க சிறப்பாக பணியாற்றுவதோடு, மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

1 கோடி வாக்காளர்கள் நீக்கம்..! ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்..? புயலைக் கிளப்பும் பின்னணி..!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.! கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.. சென்னையின் நிலை என்ன?