முடிவடையாத மழைநீர் வடிகால் பணிகள்.. தமிழக அரசுக்கு அட்வைஸ் கொடுக்கும் ராமதாஸ்

By Raghupati RFirst Published Oct 9, 2022, 5:04 PM IST
Highlights

சென்னையில் வெள்ளத்தை தவிர்க்க, மழைநீர் வடிகால்களில் தற்காலிக இணைப்பை ஏற்படுத்துமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை மாநகரத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக நிறைவடைவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை.

வடகிழக்கு பருவமழை அடுத்த இரு வாரங்களில் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போதுள்ள வேகத்தில் பணிகள் தொடர்ந்தால், சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும்.

இதையும் படிங்க..‘முதலில் எருமை, அடுத்து மாடு.. இப்போ அதுவும் போச்சா.! அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் வந்தே பாரத் ரயில்’

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் பருவமழைக்குள்ளாக இந்த பணிகள் நிறைவுபெறாது என்பதே உண்மை. 80 முதல் 85 % மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், உண்மையில் 60 – 65% பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன.

அதிலும் பல இடங்களில் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. எனவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எங்கெல்லாம் வடிகால்களை இணைக்க முடியுமோ அங்கெல்லாம் வடிகால்களை இணைப்பதன்மூலம் வெள்ள பாதிப்பை ஓரளவு தடுக்கலாம்.

இதையும் படிங்க..திமுக பிளானை காப்பி அடித்த அண்ணாமலை.. அதே இடம், அதே நேரம்.. நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

புதிதாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில் தங்கு தடையின்றி வெள்ள நீர் வெளியேறுவதை சோதனைகள் மூலம் உறுதி செய்ய வேண்டும். மேலும் மழைநீர் வடிகால் அமைக்கப்படும் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. விபத்துகளைத் தவிர்க்க அவற்றையும் விரைந்து சரி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..‘ஈபிஎஸ் அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவிய முக்கிய விக்கெட்.. அதிர்ச்சியில் எடப்பாடி தரப்பு !’

click me!