PM Modi : மூன்று நாள் பயணமாக இந்த மாத இறுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் வரவுள்ளார். இது குறித்து இந்த பதிவில் காணலாம்.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்புக்கு முன்னதாக தமிழகத்திற்கு வந்து, இங்குள்ள புனித ஸ்தலங்களில் நீராடி அதன் பிறகு அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றார் பிரதமர் மோடி. அதன்பின் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இம்மாதம் 30ம் தேதி கன்னியாகுமரிக்கு வர உள்ளார் பாரத பிரதமர் மோடி அவர்கள்.
மே 30ம் தேதி தமிழகம் வரும் பிரதமர், மே மாதம் 31ம் தேதி மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளதாகவும், அதன் பிறகு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பிற்பகலில் அவர் மீண்டும் டெல்லி புறப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
undefined
நெல்லையில் உச்சக்கட்ட பதற்றம்; தீபக் ராஜாவின் உடலை சூழ்ந்த ஆதரவாளர்கள் - குவிக்கப்பட்ட போலீஸ் படை
முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இறுதி கட்ட வாக்குப்பதிவின்போது, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இமயமலை பயணம் சென்று அங்குள்ள குகை ஒன்றில் தியானம் செய்தது அனைவரும் அறிந்ததே. மேலும் அந்த பயணத்தின் போது அவர் கேதார்நாத்தில் உள்ள சிவன் கோவிலிலும் வழிபாடு மேற்கொண்டார்.
ஆகவே தற்பொழுது 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே மாதம் 30, 31 மற்றும் ஜூன் மாதம் ஒன்று ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளது மிகவும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பிரதமரின் வருகையையொட்டி கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் விவேகானந்தர் மண்டபத்திலும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.