தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 11 ஆம் வகுப்பு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 20 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. 12 ஆம் வகுப்பில் 93.76% பேரும் 10 ஆம் வகுப்பில் 90.07 % பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனையடுத்து 11 ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் அரசு மற்றும் தனியார் கலை கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் மாணவ சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. தேர்ச்சி பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் படிக்க:அதிமுக ஒற்றை தலைமை..ஜெயலலிதாவுக்கு சசிகலா, இப்போ ? திருநாவுக்கரசர் சொன்ன சீக்ரெட்!
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத்தேர்வு தேதி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு, ஜூலை 25 முதல் ஆக.,1 வரையிலும்; பிளஸ் 1க்கு ஆக., 2 முதல் 10 வரையிலும்; 10ம் வகுப்புக்கு ஆக.,2 முதல் 8 ஆம் தேதி வரையிலும் துணை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
மேலும் படிக்க:Annamalai : அண்ணாமலைக்கு நன்றி சொன்ன திருமாவளவன்.. எதற்கு தெரியுமா ?
இந்நிலையில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிகள் இன்று வெளியிடப்படுகிறது. காலை 10 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.மேலும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnresults.in, www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.