இனி பிளாஸ்டிக் ஆதார் கார்டு நோ...! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...!

Asianet News Tamil  
Published : Feb 12, 2018, 04:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
இனி பிளாஸ்டிக் ஆதார் கார்டு நோ...! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...!

சுருக்கம்

Plastic Aadars card issued in e-service centers has been terminated.

தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களில் வழங்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் ஆதார் அட்டை நிறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சாதிச்சான்று, வருமானவரி சான்று, இருப்பிடச்சான்று போன்ற ஆவணங்களை வழங்க 32 மாவட்டங்களிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இ-சேவை மையம் தொடங்கப்பட்டது.  

இங்கு சாதிச்சான்று, வருமானச் சான்று, வருவாய் சான்று, கணவனால் கைவிடப்பட்டவருக்கான சான்று போன்றவற்றுக்கு மனு எழுதிக்கொடுத்து சான்று பெற வேண்டிய நிலை இருந்தது. 

இந்த சான்றுகளுடன், ஆதார், மருத்துவக்காப்பீட்டு திட்ட அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளையும் இம்மையங்கள் மூலம் பெறும் நடைமுறை கடந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. 

இதற்காக தமிழகம் முழுவதிலும் 465 இ-சேவை மையங்கள் மற்றும் பொதுசேவை மையங்கள் உட்பட 10,500 மையங்கள் தொடங்கப்பட்டன. 

இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு பிளாஸ்டிக் ஆதார் கார்டுகள் பயன்படுத்தக்கூடாது என ஆதார் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. ஆதார் விவரங்களை பதிவிறக்கம் செய்து மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கடந்த வாரம் ஆதார் ஆணையம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களில் வழங்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் ஆதார் அட்டை நிறுத்தப்பட்டுள்ளது. 


 

PREV
click me!

Recommended Stories

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவில்லையா..? 30 வரை அவகாசம் நீட்டிச்சிருக்காங்க.. மிஸ் பண்ணாதீங்க
லேப்டாப்பில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. வேலூரில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!