சென்னை கோயிலில் பிரசாதமா புளியோதரைக்கு பதிலா பீட்சா, பர்கர்... கலி முத்திடுச்சு...

Asianet News Tamil  
Published : Mar 26, 2017, 09:50 AM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
சென்னை கோயிலில் பிரசாதமா புளியோதரைக்கு பதிலா பீட்சா, பர்கர்... கலி முத்திடுச்சு...

சுருக்கம்

pizza burger given in chennai temples

கோயில்  பிரசாதம் என்றாலே புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் கொடுப்பதைப் பற்றித்தான் கேள்விப்பட்டு இருந்திருப்போம், வாங்கியும் சாப்பிட்டுஇருப்போம்.

ஆனால், பிரசாதமாக பீட்சா, பர்கர், கேக், கிராக்கர் சாண்ட்விட்ச், செர்ரி டொமேட்டோ சாலட் போன்றவற்றை வாங்கி சாப்பிட்டு இருப்போமா… அது குறித்து கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

இது வேறு எங்கும் இல்லை, சென்னையின் புறநகர் பகுதியான படப்படையில் இருக்கும் “ஜெய துர்கா பீடம்” என்ற கோயிலில் கேக், பீட்சா, பர்கர் , சாண்ட்விட்ச் எல்லாம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அதிலும், இந்தியஉணவுப்பாதுகாப்பு தர ஆணையத்தின் அனுமதியோடு பிரசாதம் தரப்படுகிறது. இந்த கோயிலுக்கு வரும் பக்கதர்கள் பிரசாத டிக்கெட்டை பெற்றுக்கொண்டு, கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்ட பீட்சா, பர்கர், சாண்ட்விட்சை பெற்றுக்கொள்ளலாம்.

இது குறித்து கோயிலின் முக்கிய நிர்வாகி ஸ்ரீதர் கூறுகையில், “ உள்ளூர் மக்கள், மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலனுக்காகவே வழக்கமான புளியோதரை, பொங்கல் பிரசாதத்துக்கு மாற்றாக பீட்சா,பர்கர், சாண்ட்விட்ச் பிரசாதத்தை அறிமுகப்படுத்தினோம். மக்களுக்கு பிரசாதம் என்பதுஆரோக்கியமாகவும், சுகாதாரமாகவும் இருக்கவேண்டும், அதற்கான சமையல் கூடம் சுத்தமாக இருக்க வேண்டும் என எண்ணிணோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கோயிலில் பிறந்தநாள் கேக் பிரசாதம் அறிமுகப்படுத்தினோம். இந்த திட்டத்தின் படி, ஒருவரின் பெயரைக் கொடுத்து முன்பதிவு செய்து பிறந்தநாள் கேக்குக்கு  ஆர்டர் கொடுத்துவிட்டார், அவரின் பிறந்தநாள் அன்று குறிப்பிட்ட நபருக்கு கோயிலின் சார்பில் பிறந்தநாள் கேக்கை பிரசாதமாக அளிப்போம். இது வயதானவர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.

கடந்த வாரம் சனிக்கிழமை 81 வயதான சுப்புலட்சுமி என்பவருக்கு பிறந்தநாள். அன்றையதினம் கோயிலில் இருந்து பிறந்தநாள் கேக் பிரசாதமாக அவருக்கு வீட்டிலேயே சென்று கொடுக்கப்பட்டது. இதைப் பார்த்து சுப்புலட்சுமி மிகுந்த மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைந்து இருக்கிறார்.

இது குறித்து சுப்புலட்சமி கூறுகையில், “ என் வாழ்க்கையில் இதுபோல் பிறந்தநாள் பரிசையும், பிரசாதத்தையும் பார்த்தது இல்லை. கேக்கில் பாரம்பரியமாக மெழுகுவர்த்திக்கு பதிலாக, அகல்விளக்கு வைக்கப்பட்டு இருந்தது, மகிழ்ச்சியும், ஆச்சர்யத்தையும் அளித்தது.  பூக்கள் தூவப்பட்டு, கோயிலின் பிரசாதமாகவே உணர்ந்தேன்” என்றார்.

PREV
click me!

Recommended Stories

இதெல்லாம் ரொம்ப தப்பு முதல்வரே.! சொன்ன மாதிரியே பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவாங்க! திமுக கூட்டணி கட்சி
மக்கள் பாதுகாப்பு தான் முக்கியம்.. திமுக அரசுக்கு எதிராக பொங்கியெழுந்த கார்த்தி சிதம்பரம்!