பச்சைத் தேயிலைக்கு நிரந்தர விலை நிர்ணயம் - கோரிக்கை வைத்தது ஆர்ப்பாட்ட கொடியை தூக்கியது தமாக...

First Published Jun 29, 2018, 12:08 PM IST
Highlights
Permanent Pricing for Green Tea - tmk Demonstration


நீலகிரி

பச்சை தேயிலைக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரசார் நீலகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரியில் தமிழ் மாநில காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

“நீலகிரியில் கடந்த 25-ம் தேதி பச்சை தேயிலை கொள்முதல் செய்வதை தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் நிறுத்தி வைத்துள்ளதைக் கண்டிப்பது,

மீண்டும் தேயிலை கொள்முதல் செய்ய வலியுறுத்துவது,

நீலகிரி மாவட்ட மக்களின் தேயிலை தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் அனைத்தும் கூட்டு பட்டாவாக உள்ளது.

இதுநாள் வரை வட்டாட்சியர் இந்த நிலங்களுக்கு விவசாயிகள் வங்கிக்கடன் பெற அனுபோக சான்று வழங்கி சான்று வழங்குவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கக் கூடும் என்பதால் உடனடியாக இந்த தடையை விலக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பச்சை தேயிலைக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்யக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீலகிரி மாவட்ட இளைஞரணி தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். கோத்தகிரி வட்டார தலைவர் மனோஜ் காணி, மாவட்ட துணை தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோத்தகிரி மற்றும் கீழ்கோத்தகிரி வட்டார த.மா.கா. நிர்வாகிகள் இளைஞர் அணியினர் பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட இளைஞரணி பொது செயலாளர் சுஜித் நன்றி தெரிவித்தார்.

click me!