அரியலூர் அருகே பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்து - பொதுமக்கள் சாலை மறியல்...!

 
Published : Oct 24, 2017, 11:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
அரியலூர் அருகே பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்து - பொதுமக்கள் சாலை மறியல்...!

சுருக்கம்

people road protest in ariyalur about bus lorry accident

அரியலூர் அருகே பள்ளி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 5 மாணவர்கள் காயம் அடைந்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்புக்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அரியலூர் - ஜெயங்கொண்டம் பகுதியில் ஏராளமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றனர். அங்கு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் தனியார் பள்ளி பேருந்து மூலம் தினமும் காலை பள்ளிக்கு செல்வர். 

மேலும் அப்பகுதியில் தொழிற்சாலைகள் இருப்பதால் லாரிகள் போக்குவரத்து அதிகமாக இருக்கும். அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலை மிகவும் குறுகிய நிலையில் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. 

இந்நிலையில், இன்று காலை அரியலூர் அருகே பெருமாள்சாவடியில் தனியார் பள்ளி பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டது. இதில் 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். 

இதனால் விபத்தை கண்டித்து  பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாறியலால் அரியலூர்-ஜெயன்கொண்டம் சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு