இனிமே ஸ்பாட் ஃபைன் கிடையாது...! paytm-ல ஃபைன் கட்டலாம்...! சென்னை போக்குவரத்து காவல் அறிமுகம்

 
Published : May 10, 2018, 01:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
இனிமே ஸ்பாட் ஃபைன் கிடையாது...! paytm-ல ஃபைன் கட்டலாம்...! சென்னை போக்குவரத்து காவல் அறிமுகம்

சுருக்கம்

Payment of cashless penalties

சென்னை மாநகரில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் இனி ஃபைன் கட்டுவதில் இருந்து தப்ப முடியாது. ஸ்பாட்ஃபைன் முறைக்கு பதிலாக, நேரடி பணமில்லா அபராதம் செலுத்தும் முறை இன்றுமுதல் போக்குவரத்து துறை நடைமுறைப்படுத்தி உள்ளது.

தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வாகன ஓட்டிகள் நேரடி அபராத தொகையை டிஜிட்டல் கட்டண முறைகளில் செலுத்த ஏதுவாகவும் பணமில்லா அபராதம் செலுத்தும் முறையை கொண்டு வந்துள்ளது.

 போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபாராத தொகையை பெறும் முறையில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், சென்னை மாநகரபோக்குவரத்து காவல் துறை, நேரடி பணமில்லா அபராதம் செலுத்து முறையை இன்று முதல் நடைமுறைப்படுத்தி உள்ளது.

போக்குவரத்து போலீசார், ஸ்பாட் ஃபைன் பொதுமக்களிடம் வாங்குவதால் பல்வேறு மனக்கசப்புகள் ஏற்பட்டன.

போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் தேவையில்லாத வாக்குவாதம் வீண் பிரச்சனைகள் ஏற்பட்டன.

இதனால், ஸ்பாட் பைன் முறையை நிறுத்துவதாகவும், நேரடி பணமில்லா அபராதம் செலுத்து முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையை, பணமில்லா அபராத தொகை மூலம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்ட் / டெபிட் கார்டு, பாரத ஸ்டேட் வங்கி ஆன்லைன் பணபரிவர்த்தனை, போஸ்ட் ஆபிஸ், இ-சேவை மையம், PAYTM இதுபோன்று பல்வேறு வகையில் பணம்செலுத்த வகை செலுத்தப்பட்டுள்ளது.

பணம்தான் கொடுக்க வேண்டும் என்றால் நீதிமன்றம் சென்று செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் போலீசாரிடம் பணம் கொடுக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் வாகன விபத்தில் 1347 பேர் உயிரிழந்துள்ளனர். குடும்ப உறுப்பினரை இழந்து வாடும் நிலையை அறிந்த பின்னரே போக்குவரத்து காவல் துறை இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை! ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
Tamil News Live today 23 December 2025: ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்