வெளியூர் பயணிகள் கடும் அவதி - காசிருந்தும் பிச்சைக்காரர்களான சோகம்

 
Published : Nov 10, 2016, 03:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
வெளியூர் பயணிகள் கடும் அவதி - காசிருந்தும் பிச்சைக்காரர்களான சோகம்

சுருக்கம்

மத்திய அரசு திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

குறிப்பாக வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்த பயணிகள் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள் . இரவில் திடீரென அறிவிக்கப்பட்டதால் வெளியூர் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஓட்டல்களில் , சிறிய கடைகளில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டை ஏற்க மறுத்ததால் பொருட்களை வாங்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளானார்கள். 

இதனால் ஆவேசமடைந்த மக்கள் மோடியையும் , அருண் ஜெட்லியையும் திட்டி தீர்த்தனர். எவனாஅவது இரவில் இது போன்று அறிவிப்பானா, இது மக்கள் மேல் அக்கறை கொள்கிறவர்கள் செய்யும் செயலா? இந்த பணம் அரசாங்கத்தின் பணம் தானே என திட்டி தீர்த்தனர். 

ஏடிஎம்கள் இரண்டு நாட்களுக்கு விடுமுறை எனபதால் பணத்தை எடுக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளானார்கள். சரி ஊருக்கே திரும்பி விடுவோம் என்று திரும்ப ரயில் நிலையத்திலேயே ஊருக்கு டிக்கெட் எடுத்தால் போய் விடலாம் என்று திரும்ப கேட்டால் செல்லாது என்று ரயில் நிலையத்தில் அறிவித்துள்ளனர். 

மத்திய அரசே பணத்தை வாங்கச்சொல்லி இருக்கிறார்களே என்று கேட்டதற்கு அதை மத்திய அரசிடம் போய் கேளுங்கள் என்று டிக்கெட் கவுண்டரில் கூறியுள்ளனர். இதனால் கடும் கொதிப்பில் பயணிகள் உள்ளனர்.

இதனால் காசிருந்தும் பிச்சைக்காரர்களாக ஆன நிலை இன்று வெளியூர் பயணிகள் உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த பெலிக்ஸ் ஜெரால்டு! சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய விஜய்! தவெகவினர் குஷி!
எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது