2வது கல்யாணத்துக்கு வற்புறுத்திய பெற்றோர்கள்...2 வயது மகனை கொன்ற கணவனை பறிகொடுத்த பெண்...

 
Published : Feb 05, 2018, 12:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
2வது கல்யாணத்துக்கு வற்புறுத்திய பெற்றோர்கள்...2 வயது மகனை கொன்ற கணவனை பறிகொடுத்த பெண்...

சுருக்கம்

Parents who pressed for the 2nd marriage the woman who lost her husband who killed the old son

2வது திருமணம் செய்ய, பெற்றோர் வற்புறுத்தியதால் மனமுடைந்த பெண் ஒருவர், தனது 2 வயது மகனுக்கு கொசு மருத்து கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   

சென்னை சேத்துப்பட்டு சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் கீதா. இவர், பள்ளியிலிருந்து கல்லூரிவரை ஒன்றாக படித்த ஸ்ரீதர் என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து தனது பெற்றோரின் சம்மதத்துடன் வடபழனி முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர், இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, வசதியான குடும்பத்தில் பிறந்த கீதா கஷ்டப்படுவதை பார்த்து அவரது பெற்றோர் வேதனை அடைந்தனர். இதனால் ஸ்ரீதருக்கும் கீதாவின் பெற்றோர் சரியாக மரியாதை கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கீதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அப்போது, ஸ்ரீதர் தனது மனைவியை வசதியாக வாழ வைக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் மனைவி இல்லாத சமயத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால், தனது காதல் கணவரை மறக்க முடியாமல் கீதா தவித்து வந்தார்.

இந்நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தனது குழந்தையை வைத்துக் கொண்டு அவர் பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கீதாவுக்கு அவரது பெற்றோர் இரண்டாவதாக  திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து கீதாவிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், கீதா இரண்டாவது திருமணத்திற்கு சம்மதிக்காமல் தனது குழந்தை ரோகித்துடன் வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

கீதாவிடம் நேற்று முன்தினம் இரவு இரண்டாவது திருமணம் குறித்து அவரது பெற்றோர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கீதா தனது மகனை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது தனது 2 வயது மகனுக்கும் கொசு மருத்து கொடுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அதே மருந்தை அவரும் குடித்துவிட்டு வீட்டின் சமையல் அறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அக்கம் பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்து உடனே, ஓடிவந்து கதவை உடைத்து கீதாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். கீதா தற்போது சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் கீதா சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து, படுக்கை அறையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்த குழந்தையை பார்த்த போது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி, விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை இறந்து கிடந்த இடத்தில் இருந்து உடைந்த நிலையில் கொசு மருந்து பாட்டில் கிடந்தது.  பின்னர், வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!