மீண்டும் ஒரு ஆணவக்கொலை...! ஓசூர் காதல் ஜோடியின் சடலங்கள் மீட்பு..!

Published : Nov 16, 2018, 01:57 PM IST
மீண்டும் ஒரு ஆணவக்கொலை...! ஓசூர் காதல் ஜோடியின் சடலங்கள் மீட்பு..!

சுருக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த காதல் ஜோடி ஆவணக்கொலை செய்யபட்டு காவிரி  ஆற்றங்கரையில் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த காதல் ஜோடி ஆவணக்கொலை செய்யபட்டு காவிரி ஆற்றங்கரையில் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர் சூடுகொண்டபள்ளியை சேர்ந்தவர் நத்தீஸ் இவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். இவர் அதே பகுதியை சேர்ந்த சுவாதி என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களின் காதலருக்கு, பெண்ணின் வீட்டில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதை எல்லாம் பொருட்படுத்தாமல், சென்ற ஆகஸ்ட் மாதம் இருவரும் காதல் திருமணம் செய்து பதிவு செய்து உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், நத்தீஸ் சுவாதி காதல் ஜோடிகளின் சடலங்கள் கை கால் வெட்டப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலம் காவேரி ஆற்றங்கரையில் இருந்து மீட்டு எடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பெண்ணின் தந்தை உட்பட நான்கு பேர் இந்த கொலை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிய வந்து உள்ளது. பின்னர் பெண்ணின்  தந்தை உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பித்து சென்று தலை மறைவாக உள்ள நான்கு பேரை போலீசார் தேடி வருவதாக தெரிவித்து உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!