
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு அறிவித்தார். இதையொட்டி மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கருப்பு பணம், கள்ள நோட்டு ஒழியும் என கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து, அந்த பணத்தை வைத்திருந்த மக்கள், சில்லறையாக மாற்ற பல்வேறு கடைகளுக்கு படை எடுத்தனர்.
சிலர் பெட்ரோல் பங்க்குகளிலும், டாஸ்மாக் கடைகளிலும் மாற்றி கொண்டனர். ஆனாலும், அங்கேயே போதிய அளவுக்கு சில்லறை இல்லாததால், பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நகைக்கடைகளுக்கு படையெடுக்க தொடங்கினர். இதையொட்டி நேற்று இரவு முதல் இன்று காலை வரை நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதியது.
இதுபோல் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாக நில நடுக்கம், சுனாமி, ஆழி பேரலை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து முடிந்த பிறகு, ஏற்கனவே, இதுபற்றி பஞ்சாகங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என சிலர் கூறுவது வழக்கம்.
இந்நிலையில், இந்தாண்டுக்கான ஆற்காடு பஞ்சாங்கத்தில், இன்று முதல் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என குறிப்பிடுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வந்துள்ளது. ஆற்காடு பஞ்சாங்கத்தின் 12ம் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து வந்துள்ளது என சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.