
போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று போலீசாருக்கு டிஜிபி ராஜேந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.
கடந்த 6 ஆம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்தருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால், 3 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
சிக்னல் மீறல், விதிமீறல், மது போதையில் வாகனம் ஓட்டுவது என அனைவரும் கண்காணிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், காவல் துறையைச் சேர்ந்த அனைவரும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் டிஜிபி ராஜேந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும், அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் எனவும் போலீசாருக்கு, டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார்.