வறட்சி பாதித்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆய்வு செய்க - முதல்வர் ஓபிஎஸ் உத்தரவு

Asianet News Tamil  
Published : Jan 03, 2017, 03:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
வறட்சி பாதித்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆய்வு செய்க - முதல்வர்  ஓபிஎஸ் உத்தரவு

சுருக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதும் , காவிரி நீர் கிடைப்பதில் ஏற்ப்பட்ட பிரச்சனையினாலும்  கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.தென்மேற்கு , வடகிழக்கு பருவமழைகள் பொய்த்து போனது , நிலத்தடி நீர் இல்லாமல் போனது ,காவிரி நீர் இல்லாமல் போனது நூறாண்டுகளில் இல்லாத வறட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது. 

 32 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் மழை குறைவு .   இதையடுத்து தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்து கட்சித்தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகள் சங்கத்தினர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து 18 அமச கோரிக்கை மனுவை அளித்தனர். இந்நிலையில் இன்று முதல்வர் ஓபிஎஸ் வறட்சி பாதித்த பகுதிகளில் உடனடியாக ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார்.

தற்போதுள்ள வறட்சி நிலை குறித்து விவசாயிகள் கவலை கொள்ள தேவையில்லை, தேவையான நிவாரணங்களை அரசு வழங்கும். வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் காவிரி டெல்டா  மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட உயர் மட்டக்குழு அமைக்கப்படும், ஜன 9,10 தேதிகளில் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் பயிர் நிவாரணம் , பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

 தற்போது உள்ள 12.86 லட்சம் ஏக்கரில் 8.6 லட்சம் ஏக்கர் பயிர் காப்பீடு  செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு முழுமையாக காப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.. இந்த குழு அளிக்கும் ஆய்வு அடிப்படையில்  உடனடியாக உதவி அளிக்கப்படும் என முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சென்னைதான் எப்பவும் டாப்! போகிக்கும் பொங்கலுக்கும் சேர்த்து ரூ. 518 கோடி மது விற்பனை!
அனல் பறந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. குலுக்கல் முறையில் காரைத் தூக்கிய அஜித்! டிராக்டர் வென்ற குலமங்கலம் காளை!