சோபியா குறித்து "வாட்ஸ் அப்பில்" உலா வரும் மற்றொரு அதிர்ச்சி தகவல்...!

Published : Sep 06, 2018, 03:49 PM ISTUpdated : Sep 09, 2018, 08:12 PM IST
சோபியா குறித்து "வாட்ஸ் அப்பில்" உலா வரும் மற்றொரு அதிர்ச்சி தகவல்...!

சுருக்கம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில், சோபியா என்ற மாணவி பாசிச பாஜக ஒழிக என கோஷம் எழுப்பினார். இது குறித்து அவர் மீது தமிழிசை கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில், சோபியா என்ற மாணவி பாசிச பாஜக ஒழிக என கோஷம் எழுப்பினார். இது குறித்து அவர் மீது தமிழிசை கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு  தொடரப் பட்டு உள்ளது. 

இந்நிலையில், சோபியா திட்டமிட்டு கோஷம் எழுப்பியதை அவர் பதிவு செய்த ட்வீட் மூலம் தெரிய வந்துள்ளது. இது ஒருபக்கம் இருக்க சோபியா பற்றி பல கருத்துக்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் தற்போது வாட்ஸ் அப்பில் அதிவேகமாக பரவக் கூடிய விஷயம் இதுதான்..

வாட்ஸ் ஆப் தகவல்

ஷோபியாவின் கோஷம் ஒரு உண்மை தகவல்!!

கனடா இங்கிலாந்து அமெரிக்க நாடுகளில் குடியுரிமை பெற வேண்டுமானல் குடியுரிமை பெற விரும்புவோர் அவர்களுடய சொந்த நாட்டில் வாழ முடியாது தன் மீது மிக பெரிய வழக்கு உள்ளது அந்த வழக்கால் என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது! எனவே தான் அங்கு வாழ முடியாது எனவே எனக்கு நான் படிக்கும்/பணிபுரியும் தங்கள் நாட்டில் இருக்க எனக்கு குடியுரிமை கொடுங்கள் என்று கேட்டால் சம்மந்தபட்ட நாடு கொடுத்தே ஆக வேண்டும் என்பதை அறிந்தே ஷோபிகா தமிழிசையை மற்றும் பிஜேபியை வசை பாடி தானாக வழக்கை வாங்கி உள்ளார் என்று சொல்லப்படுகிறது!

சோபியா மே17இயக்கத்தை சார்ந்தவர் என்றும் இவரை பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்திய போது அவர் ஜாமீனுக்கு 15 க்கும் மேற்பட்ட மே 17 இயக்கத்தின் வழக்கறிஞர்கள் திரண்டு இருந்ததை கண்ட நீதிபதி "இந்த வழக்குக்கு ஏன் இவ்வளவு வழக்கறிஞர்கள்" என்று கேட்டதும் இவர் மே17 இயக்கத்தில் உள்ளதை காட்டுகிறது என்றும் சொல்லப்படுகிறது!!

இவர் யார் என்று காவல் துறை ஆராய தொடங்கிய உடனேயே இவருடைய twitter, facebook போன்ற இணைய தள  தடயங்கள் உடனே அழிக்கபட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள்!! காவல் துறையினர் தற்போது மே17 இயக்கத்தினரின் அன்னிய நாட்டு தொடர்பு பற்றியும் அலச தொடங்கி விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது!! எது எப்படியோ சோபியாவின்  "ஒரு கோஷத்தில் இத்தனை ரகசியங்கள் உண்டா?" என்றே காவல் துறையினர் மூக்கில் விரல் வைக்கின்றனர்!!!  ஏன் நாமும் தான்!!

மேற்குறிப்பிட்ட சோபியா குறித்த இந்த செய்தி வாட்ஸ் அப்பில் தொடர்ந்து பரவிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் மேலும் சோபியா யார் என்ற விசாரணை துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!