
காவல் ஆய்வாளர் பெரியபாண்டி, ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், முனிசேகர் பொய் புகார் கொடுத்துள்ளதாக ராஜஸ்தான் காவல் துறை கூறியுள்ளது. இது தொடர்பாக முனிசேகர் மீது மேலும் ஒரு வழக்கு பாய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை, கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது.
கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, ஆய்வாளர் பெரியபாண்டியன் மட்டும் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி வீர மரணம் அடைந்தார். தற்போது இவருடைய மரணத்தில் பல முக்கிய சந்தேகங்கள் எழுந்துள்ளன. காவல் ஆய்வாளர் முனிசேகர், ராஜஸ்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் கொள்ளையன் நாதுராமின் தந்தை உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், சிசிடிவி காட்சியில் இடம் பெற்ற கொலையாளிகள் எவரையும் போலீசார் இன்னும் கைது செய்யப்படவில்லை.
கொள்ளையன் நாதுராம் மறைந்திருந்த சுண்ணாமபு கால்வாய் பகுதிக்கு அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு செல்ல பெரியபாண்டி உள்ளிட்டோர் புறப்பட்டு செல்ல முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று பெரியபாண்டி தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் பதுங்கி இருப்பது மூன்றே பேர்தான் என்று சினிமா போலீஸ் போல வசனம் பேசி முனிசேகர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது முதலில் சென்ற பெரியபாண்டி, சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. உள்ளே சென்ற பெரியபாண்டி, நாதுராம் கும்பலிடம் சிக்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற முனிசேகர் தன்னுடைய துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால் அது குடிற தவறி பெரிய பாண்டியன் மீது குண்டு பாய்ந்துள்ளது.
இதை மறைப்பதற்காக அங்கு நடக்காததை எல்லாம் நடந்தது போல, முனிசேகர் பொய் புகார் கொடுத்துள்ளதாக ராஜஸ்தான் காவல் துறை கூறுகிறது. இந்த பொய் புகாருக்காக முனிசேகர் மீது மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
அது மட்டுமல்லாது முனிசேகர் மற்றும் உடன் சென்ற 4 போலீசாரும் வீட்டுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பெரியபாண்டி உயிரிழந்த இடத்தில் என்ன நடந்தது என்னவென்று, ரகசிய இடத்தில் வைத்து ஒவ்வொருவரின் வாக்குமூலத்தையும் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளது ராஜஸ்தான் போலீஸ்.