சண்டையை விலக்கச் சென்றவருக்கு நிகழ்ந்த சோகம்! ரவுடி கும்பலால் படுகொலை செய்யப்பட்ட கொடுமை! 

Asianet News Tamil  
Published : Feb 12, 2018, 01:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
சண்டையை விலக்கச் சென்றவருக்கு நிகழ்ந்த சோகம்! ரவுடி கும்பலால் படுகொலை செய்யப்பட்ட கொடுமை! 

சுருக்கம்

One killed in Thirupparankundram

சண்டையை விலக்க சென்ற ஒருவர், ரவுடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே பெருங்குடி, வாசுகி நகரைச் சேர்ந்தவர் அழகர். இவரது வீட்டுக்கு, அவரது தம்பி சுரேஷ் (59) வந்துள்ளார். 

இந்த நிலையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி முனீஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

வாய்த் தகராறில் ஈடுபட்டு வந்த அவர்கள், ஒரு கட்டத்தில், அவர்களுக்கிடையே கைகலப்பாக மாறியது. இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அழகரின் தம்பி சுரேஷ், சண்டையை விலக்க சென்றுள்ளார். 

விலக்க வந்த சுரேஷை, ரவுடி முனீஸின் கூட்டாளிகள் கத்தியால் தலையில் வெட்டியுள்ளனர். கத்தியால் தாக்கப்பட்ட சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

சுரேஷ் உயிரிழந்ததை அடுத்து, ரவுடி முனீஸ் மற்றும் அவனது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். ரவுடி கும்பலால் சுரேஷ் கொலை செய்யப்பட்டது குறித்து, அருகில் இருந்தோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சுரேஷின் உடலைக் கைப்பற்றி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷைக் கொலை செய்த முனீஸ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. முனீஸ் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

விஜய் 2வது முறை CBI அலுவலகத்தில் ஆஜர்… கேள்விகள் என்ன? முழு அப்டேட்
விஜய்யை திக்குமுக்காட வைத்த சிபிஐ.. 6 மணி நேரம்.. தளபதிக்கு தலைவலி கொடுத்த 'அந்த' கேள்விகள்!