குடியசு தினவிழாவில் ஆட்சியர் கொடியேற்றி, காவலாளர்களின் அணிவகுப்பு மரியாதை…

First Published Jan 7, 2017, 9:50 AM IST
Highlights

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி, காவலாளர்களின் அணிவகுப்பு மரியாதையுடன், நல உதவிகளும் வழங்கி குடியரசு தினவிழா கொண்டாடப்பட இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழா ஜனவரி 26–ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், தேசியக் கொடியை ஏற்றுகிறார்.

மேலும் காவலாளரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு நல உதவிகளும் வழங்குகிறார்.

இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இவ்விழாவின் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் ஆட்சியர் கதிரவன் தலைமையில் நேற்று நடந்தது.

இதில் மாவட்ட விளையாட்டு அரங்கில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் குடிநீர் வசதி, பார்வையாளர்கள் அமர இருக்கை வசதி, வாகனங்களை நிறுத்தி வைக்க இடம் ஒதுக்குவது, பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, தீயணைப்பு வாகனம், அவசர ஊர்திகள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைத்தல் முதலியவை தொடர்பாக குறித்து ஆட்சியர் கதிரவன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்டி, கூடுதல் காவல் கண்காணிப்ப்பாளர் வீரராகவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கலையரசி, உதவி ஆட்சியர் முகமது அஸ்லாம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

click me!