#Breaking : Omicron : உச்சக்கட்ட பரபரப்பு...தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான்... உடன் வந்த 7 பேருக்கு கொரோனா!!

By Narendran SFirst Published Dec 15, 2021, 10:00 PM IST
Highlights

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 
 

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒமைக்ரானை தடுக்க தமிழக விமான நிலையங்களில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நைஜீரியாவிலிருந்து வந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நைஜீரியாவிலிருந்து வந்த நபரோடு தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் என்னும் புதிய வகை கொரோனா இருக்குமோ என்ற அச்சம் இருப்பதாகவும் 7 பேரின் பேரின் மாதிரிகள் புனே, ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகங்களுக்கு பரிசோதனைக்காக அனுப்பபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு வந்த 47 வயது நபருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர் லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர் இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 41 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று உறுதியான நபரோடு விமானத்தில் வந்தவர்கள், தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மக்கள் பதற்றம் அடையாமல், ஆக்கப்பூர்வமாக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 1,400 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

click me!