மோட்டார் சைக்கிள் மோதியதில் பேருந்துக்காக காத்திருந்த முதியவர் சாவு; மூவர் பலத்த காயம்...

 
Published : Jan 12, 2018, 07:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
மோட்டார் சைக்கிள் மோதியதில் பேருந்துக்காக காத்திருந்த முதியவர் சாவு; மூவர் பலத்த காயம்...

சுருக்கம்

Old woman waited for a bus on a motorcycle Triple Injury ...

தூத்துக்குடி

தூத்துக்குடியில், மோட்டார் சைக்கிள் மோதியதில் பேருந்துக்காக காத்திருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் பலத்த காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், இளையரசனேந்தலை அடுத்த வெங்கடாசலபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் க.வெங்கடசாமி (64). இவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் பழைய அப்பனேரி விலக்கு அருகே சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த பைக், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் பேருந்திற்காக நின்றுக் கொண்டிருந்த அங்கன்வாடி ஊழியர் கலாவதி (56) மீது முரட்டுத்தனமாக மோதியது.

பைக் ஓட்டி வந்த கோவில்பட்டி திருமலை நகரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் கல்லூரி மாணவர் முத்துசரவணன் (17), பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த வீரவாஞ்சி நகர் 6-வது தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் கல்லூரி மாணவர் ராஜகணேஷ் (17) மற்றும் வெங்கடசாமி, கலாவதி ஆகிய நால்வரும் பலத்த காயம் அடைந்தனர்.

காயமடைந்த நால்வரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். கலாவதி மற்றும் வெங்கடசாமி ஆகிய இருவரும் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  

அங்கு  வெங்கடசாமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!