
பிரசித்தி பெற்ற வடபழனி கோவிலில் பிச்சை எடுக்கும் ஒரு வயதான பெண்மணி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் நடித்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும் .
இவருடைய பெயர் ஜமுனா டான்சராகவும், நடிகையாகவும் இருந்துள்ளார் . நடிகர் சிவகுமார் ஜெயலலிதா நடித்த காலத்தில், இவர்களுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இன்று இந்த பெண்மணி யாரும் இல்லாத அநாதையாக வடபழனி கோவிலில் பிச்சை எடுத்து வருகிறார் .
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மோட்டார் சுந்தரம் பிள்ளை, சரஸ்வதி சபதம் போன்ற படங்களில் குரூப் டான்சராகவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனும் இணைந்து நடித்தவர் ஜமுனா என்பது குறிப்பிடத்தக்கது . ஜமுனாவின் கணவர் ஒரு மேக்கப் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார் .
தான் ஒரு சிறந்த டேன்சராக இருந்த ஜமுனா , தன் கணவர் இறந்தபின் யாருடைய ஆதரவும் இல்லாமல் இந்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார் .சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் கமல் மற்றும் ரஜினி காந்த் இந்த பெண்மணிக்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளனர் .
இந்நிலையில், நடிகர் விஷால் தனக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் ஜமுனா