
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் வட மற்றும் தென் மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் வழிகின்றன. இந்நிலைகள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் சாலையை சேர்ந்தவர் வீரமணி-ராதா தம்பதி. இவர்களின் மகள் பவானி(17) சிவகாசியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் பாவனி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, இரவு பெய்த கனமழையில் அவர் மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த பவானியை உறவினர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
அதன் பின்னர் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவானி அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பவானி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருத்தங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்து கல்லூரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவியின் குடும்படுத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.