Tamilnadu employment office: அடேங்கப்பா... தமிழ்நாட்டில் "V.I.P” -க்கள் எண்ணிக்கை 73 லட்சமா..!!

By Raghupati RFirst Published Dec 31, 2021, 11:56 AM IST
Highlights

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக  73 லட்சத்து 31 ஆயிரத்து 302 நபர்கள் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வேலைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம்  தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதேபோல், ஒருசில பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் நியமிக்கப்படுகின்றனர். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் வேலைவாய்ப்பு, பயிற்சிகள் போன்றவை வழங்கப்படுகிறது. இதற்கு பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.

தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக  73 லட்சத்து 31 ஆயிரத்து 302 நபர்கள் காத்திருப்பதாக  காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்,  34,41,360 ஆண்களும்,  38,89,715 பேர் பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 227 பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை வேலை வாய்ப்புக்காக்காக பதிவு செய்தவர்களின் வயது வரையான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 19,09,646 பேரும், 19 முதல் 23 வயதுவரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 14,25,786 பேரும், 24 வயது முதல் 35 வயது வரை உள்ள அரசு பணி வேண்டி காத்திருக்கும் வேலைநாடுநர்கள் 26,86,932 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 வயது முதல் 57 வயது வரை விடுபட்ட பதிவுதாரர்கள் 12,97,693 பேர், 58 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 11,245 பேர் என தெரிவித்துள்ளது. அதேபோல மாற்றுத்திறனாளி பதிவு செய்துள்ள விவரங்கள் வெளியிட்டுள்ளது. மொத்தமாக மாற்றுத்திறனாளிகள் வேலைக்காக 1,38,698 பேர் பதிவு செய்துள்ளனர்.  இதில், ஆண்கள் 92,010 பேரும், பெண்கள் 46,688 பேரும் பதிவு செய்துள்ளனர். கை, கால் குறைபாடுடையோர் மொத்தம் 1,07871 பதிவு செய்துள்ளனர். 

அதில், 70909 ஆண்களும், 36,962 பெண்களும் பதிவு செய்துள்ளனர். விழிப்புலனிழந்தோர் மொத்தம் 16,937 பேர் பதிவு செய்துள்ளனர். அதில், 11,668 ஆண்களும், 5,269 பெண்களும் பதிவு செய்துள்ளனர். காதுகேளாதோர், வாய் பேசாதோர் மொத்தம் 13,890 பேர் பதிவு செய்துள்ளனர். அதில், 9,433 ஆண்களும், 4,457 பேர் பெண்கள் பதிவு செய்துள்ளனர்.

click me!