இனி வாட்ஸ்-அப் மூலமாகவும் குறைகளை தெரிவிக்கலாம் - சிவகங்கை ஆட்சியர் அறிவிப்பு...

 
Published : Mar 24, 2018, 11:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
இனி வாட்ஸ்-அப் மூலமாகவும் குறைகளை தெரிவிக்கலாம் - சிவகங்கை ஆட்சியர் அறிவிப்பு...

சுருக்கம்

Now you can also make complaint by whatsapp Sivagangai collector announcement ...

சிவகங்கை

குடிநீர் மற்றும் மின் விநியோகம், கனிம வளங்கள் கடத்தல் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் என எந்த குறையையும் வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவித்து உரிய தீர்வு பெறலாம் என்று சிவகங்கை ஆட்சியர் லதா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் லதா நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் விநியோகம், மின் விநியோகம், கனிம வளங்கள் கடத்தல் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை போன்றவை தொடர்பாக மக்கள் தங்கள் புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவோ அல்லது 89033 31077 என்ற செல்லிடப்பேசி வாயிலாகவோ தெரிவிக்கலாம்.

மக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு வசதியாக பல்துறை அலுவலர்கள் அடங்கிய அலுவலர் குழு ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

மேலும், 89033 31077 என்ற செல்பேசி எண்ணில் வாட்ஸ்-அப் செயலி மூலமாகவும் குறைகளை தெரிவித்து உடனுக்குடன் தீர்வு காணலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.  

PREV
click me!

Recommended Stories

காமராஜரை தப்பா பேசிய திமுக ஆட்சியை கவிழ்ப்பேன்.! திருச்சி வேலுச்சாமி ஆவேசம்
Tamil News Live today 14 December 2025: காமராஜரை தப்பா பேசிய திமுக ஆட்சியை கவிழ்ப்பேன்.! திருச்சி வேலுச்சாமி ஆவேசம்