
தமிழக அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழ்நாட்டில் கடந்த 20 வருடங்களாக கேபிள் டிவி மோனோபோலி என சொல்லப்படும் தனியார் சர்வாதிகாரத்தில் சிக்கி சின்னபின்னமாகி போனது.
அதன் பிறகு கருணாநிதிக்கும், கலாநிதிக்கும் இடையே ஏற்பட்ட தகராறால் ஒரே நேரத்தில் கலைஞர் டிவியும் அரசு கேபிள் டிவியும் தொடங்கப்பட்டது.
ஆனால் கண்கள் பணித்து இதயம் இனித்து கலாநிதியும் கருணாநிதியும் கைகோர்த்து கொண்டதால் ரூ.100 கோடி மதிப்பு கொண்ட அரசு கேபிள் டிவிக்கு மூடுவிழா நடத்தப்பட்டது.
பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெ. முதல் வேலையாக எஸ்சிவியின் அடாவடிகளுக்கு முற்று புள்ளி வைத்து அரசு கேபிள் டிவியை மீண்டும் தொடங்கினார்.
வெறும் 70 ரூபாய்க்கு அனைத்து வீடுகளுக்கும் கேபிள் இணைப்பு வழங்கப்பட்டது. இது அனலாக் முறை என்பதால் 70 சேனல் மட்டுமே கொடுக்க முடிந்தது.
ஆனால் தற்போது பெறப்பட்டிருக்கும் டிஜிட்டல் உரிமத்தால் 500 சேனல்கள் வரை தெளிவாக பார்க்கலாம்.
மெட்ரோபோலிட்டன் சிட்டி என்பதால் சென்னையை பொருத்தவரை சட்டவிதிகளின் படி அரசு நிறுவனத்தால் கூட கலாநிதி மாறனின் எஸ்சிவியை அசைத்து பார்க்க முடியவில்லை. ஆனால் அதற்கெல்லாம் தற்போது ஆப்பு வைத்தாகி விட்டது.
இனி சென்னை முழுவதும் அரசு கேபிள் தங்கு தடையின்றி தெரியும்.
இது இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலம் போராடி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.