கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள பதவிகளுக்கு தேர்தல்..? வாக்கு பதிவு தேதி அறிவிப்பு...

By Ajmal KhanFirst Published Sep 6, 2022, 12:29 PM IST
Highlights

கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 64 பதவிகளுக்கான தற்செயல் தேர்தல் தேதியை கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் தயானந்த கட்டாரியா வெளியிட்டுள்ளார்.
 

கூட்டுறவு சங்க தேர்தல்

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையராக பொதுப்பணித்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியாவை தமிழக ஆளுநர் நியமித்தார். இதனையடுத்து விரைவில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் தயானந்த கட்டாரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து வகை கூட்டுறவுச் சங்கங்களிலும் ஏற்பட்டுள்ள தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாகக் குழுஉறுப்பினர்கள் காலியிடங்களுக்கான தேர்தல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் வரும் விருதுநகர் மாவட்டம் சத்திரப் புளியங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பின்படி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலுக்கு திட்டம் அறிவிக்கப்படுகிறது. 

தேசிய, மாநில விருதுகள் வாங்கிய மகிழ்ச்சியை விட..! இது தான் எனக்கு சந்தோஷம்- கவிஞர் வைரமுத்து

செப்.29 வாக்கு பதிவு

அதன்படி அச்சங்கத்துக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தல் செப்.12-ம் தேதி நடைபெறும். கைத்தறி, தொழில் வணிகத் துறை, சமூகநலத் துறை, மீன்வளத் துறை, பட்டுவளர்ச்சித் துறை ஆகிய 5 துறைகளின் கீழ் வரும் 38 கூட்டுறவுச் சங்கங்களில் 30 தலைவர் மற்றும் 9 துணைத் தலைவர் பதவி காலியிடங்களுக்கான தேர்தலும் அன்றைய தினம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கைத்தறி, துணிநூல் துறை, மீன்வளத் துறை ஆகியதுறைகளின் கீழ் வரும் 4 சங்கங்களில் 3 தலைவர் மற்றும் 3 துணைத் தலைவர் காலி இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 7-ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் செப்.22-ம் தேதி தொடங்கும். பரிசீலனை செப்.23-ம் தேதியும், திரும்பப் பெறுதல் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் செப்.24-ம் தேதியும், போட்டியிருந்தால் செப். 29-ம் தேதி அன்று வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை, முடிவு அறிவித்தல் செப்.30-ம் தேதியும் நடைபெறும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

இதையும் படியுங்கள்

மு.க.ஸ்டாலினை சந்தித்த தங்கதமிழ் செல்வன்..! திடீர் லண்டன் புறப்பட்டார்.. என்ன காரணம் தெரியுமா..?

click me!