பாத்ரூம் போறதுக்கு கூட வழி இல்லை.. வடமாநில தொழிலாளர்கள் தவித்த பெண்கள்.. அபாய சங்கிலியை இழுத்ததால் பரபரப்பு!

By vinoth kumar  |  First Published Nov 21, 2023, 3:21 PM IST

கோவை வந்தடைந்த ரப்தி சாகர் ரயிலில் திடீரென முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வடமாநில தொழிலாளர்கள் முன்டியடித்துக்கொண்டு ஏறினர். ஆனால், அவர்களிடம் முன்பதிவு செய்ததற்கான எந்த டிக்கெட் எதுவும் இல்லை. 


முன்பதிவு செய்த பெட்டியில் வடமாநில தொழிலாளர்கள் பலர் அத்துமீறி ஏறியதை அடுத்து சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்ப்பூர் வரை வாரம் ஒருமுறை ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு கோவை வந்தடைந்த ரப்தி சாகர் ரயிலில் திடீரென முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வடமாநில தொழிலாளர்கள் முன்டியடித்துக்கொண்டு ஏறினர். ஆனால், அவர்களிடம் முன்பதிவு செய்ததற்கான எந்த டிக்கெட் எதுவும் இல்லை. வழிநெடுகிலும் வடமாநிலத்தவர்கள் ஆக்கிரமத்து இருந்ததால் பாத்ரூமுக்கு கூட போக முடியாமல் சக பயணிகள் தவித்தனர். 

Tap to resize

Latest Videos

அதிகாலை ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயில் அங்கிருந்த 3 நிமிடங்களில் புறப்பட தயாரானது.  அப்போது, எஸ்-3 பெட்டியில் இருந்த சக பயணிகள் பொறுமை இழந்து சக பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று  உரிய டிக்கெட் இல்லாமல் எஸ்-1 முதல் எஸ்- 3 வரை பயணித்த  80க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை அப்பெட்டியிலிருந்து அப்புறப்படுத்தி  2-ம் வகுப்பு பெட்டியில் கூட்ட நெரிசலோடு, நெரிசலாக ஏற்பட்டனர். அதன் பிறகு 20 நிமிடங்கள் கழித்து ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

click me!