இந்தியாவில் விவசாயம் பண்ணினால் லாபம் கிடைக்குமா ? ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் !!

First Published Jul 31, 2018, 12:14 AM IST
Highlights
No profit for farmers in india


இந்தியாவில் விவசாயம் பண்ணினால் எந்த ஒரு லாபமும் ஈட்ட முடியாது என ஆய்வு நிறுவனம் ஒன்று நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை எனவும் ஆய்வு கூறுகிறது.

இந்தியா, உக்ரைன் வியட்நாம் உள்பட 26 நாடுகளில் பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் விவசாயம் தொடர்பாக ஆய்வு ஒன்றை அண்மையில் நடத்தியது. இதில், இந்தியாவில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை மொத்த விவசாய வருமானம் 14 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ள அதிர்ச்சி தகவல்  தெரியவந்துள்ளது. 

மேலும், அந்த காலகட்டத்தில், இந்திய விவசாயிகள் தாங்கள் உறப்த்தி செய்த பொருட்களுக்கு சர்வதேச விலையில் இருந்து மிக குறைவான அளவையே பெற்றிருக்கின்றனர் என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.. 

அது மட்டும் இல்லாமல் விவசாயத்தில் முதலீடுகளை அதிகரிக்காமல் மானியத்தையே தொடர்ந்து அரசு வழங்கியுள்ளது. இதனால், விவசாயம் என்பது குறைந்த வருவாய் பெறும் அல்லது நஷ்டத்தை சந்திக்கும் தொழிலாக சுருங்கிவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, குறைந்த பட்ச ஆதரவு விலையை  பயிர்களுக்கு உயர்த்தி வழங்கி விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

click me!