அரசியல் ஆதாயம் தேடும் ஸ்டாலினை மோடி சந்திக்கமாட்டார்… தமிழிசையின் தடாலடி பேச்சு…

First Published May 23, 2017, 6:34 AM IST
Highlights
No need to meet stalin with Narendra modi


அரசியல் ஆதாயம் தேடும் ஸ்டாலினை மோடி சந்திக்கமாட்டார்… தமிழிசையின் தடாலடி பேச்சு…

அரசியல் ஆதாயம் தேடுவதையே தொழிலாக கொண்டு செயல்படும் திமுக செயல் தலைவர், ஸ்டாலினை, பிரதமர் மோடி சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை  என, தமிழக பாஜக தலைவர், தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, விவசாயிகள் பிரச்னையில், அனைத்து கட்சி கூட்டத்தை  கூட்ட, திமுகவிற்கு  எந்த உரிமையும் கிடையாது என்று தெரிவித்தார்.

அரசியல் நாடகம் நடத்தி, அதன் முலம் ஆதாயம் தேட, பிரதமரை சந்திக்க வேண்டும் என்று  ஸ்டாலின் நினைக்கிறார், ஆனால் அப்படிப்பட்டவர்களை பிரதமர்  மோடி சந்திக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்

அரசியலில் அங்கீகாரம் கிடைத்து விடாதா என்ற தவிப்பில், ஸ்டாலின் இருப்பதால்தான் நாள்தோறும்  ஒரு அறிக்கையும், நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார் என தமிழிசை என குற்றம்சாட்டினார்.

 

தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தது எல்லாம்  திமுகதான் என்றும் சென்னை,. வெள்ளத்தில் தத்தளித்ததும், திமுகவால்தான் என தெரிவித்த தமிழிசை அதற்கு பரிகாரம் செய்யவே திமுகவினர் , துார்வாரி, பாவ விமோசனம் தேடிக் கொள்கின்றனர் என்றார்..

இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காகவே உள்ளாட்சித் தேர்தலை ஆளும் கட்சியின் தள்ளி போடுகின்றனர் என்றும் . அதிமுகவின் இரு அணிகளுக்குள் உள்ள சண்டையால், தமிழக மக்கள், உள்ளாட்சி நிர்வாகமின்றி தவிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.. 

பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து ஓபிஎஸ் வேண்டுமானால் பரிசீலிக்கலாம் ,  ஆனால், நாங்கள் எந்த அழைப்பும் அனுப்பவில்லை எனறு தமிழிசை தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் சேருவது பற்றி, அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்த தமிழிசை ,  பிரதமர் மோடியின் வழியில், யார் வந்தாலும் வரவேற்போம் என்று கூறினார்.

 

 

click me!