தமிழகதத்தில் ஏசி, வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்படுத்தும் வீடுகளில், தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகிருந்தது.
தமிழகத்தில் மின் சாதன பயன்பாட்டை பொறுத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் தவறானது என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.
தமிழகதத்தில் ஏசி, வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்படுத்தும் வீடுகளில், தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகிருந்தது. சமீபத்தில் தான் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக வெளியான தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த தகவல் தவறானது என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கமளித்துள்ளது.
இதையும் படிங்க;- ஏசி, ஹீட்டருக்கு அதிக மின்சாரத்தை பயன்படுத்தினால் அபராதம்.? தமிழக அரசின் புதிய திட்டம்.? ராமதாஸ் ஆவேசம்
இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்;- தமிழ்நாடு மின் வழங்கல் விதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களில் வீடுகளுக்கு நிலைக் கட்டணம் மீதான அபராதம் விதிப்பது போன்ற தவறான தகவல்கள் சில ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது.
வீடுகளுக்கு நிலைக் கட்டணம் வசூலிப்பதிலிருந்து10.09.2022 முதல் விலக்கு அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. நிலைக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளித்த பின்பு நிலைக் கட்டணம் மீதான அபராதம் என்பது தவறான செய்தியாகும்.
மேற்கண்ட வரைவு விதிகளின் மீது பொதுமக்களின் கருத்துரைகளை சமர்ப்பிக்கலாம். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் கருத்துரைகளை பரிசீலனை செய்து விதிகளின் மீது இறுதி முடிவு செய்யப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- Tamilnadu Rain: அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 25 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை..!