50 ஆண்டுகளாக வசிக்கும் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை…

 
Published : Oct 14, 2016, 12:32 AM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
50 ஆண்டுகளாக வசிக்கும் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை…

சுருக்கம்

தர்மபுரி அருகே 50 ஆண்டுகளாக வசிக்கும் பெரியாம்பட்டி கிராம மக்களுக்கு மின் இணைப்பு, கழிவு நீர் கால்வாய் என அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. மேலும் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் நிலையில் மாணவ–மாணவிகள் உள்ளனர்.

தர்மபுரி அருகே உள்ள பெரியாம்பட்டி காமராஜர் நகரில் சுமார் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு சொந்த விளைநிலம் இல்லை. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கிளிஜோசியம் பார்ப்பது, வீடு, வீடாக சென்று பேன்சி பொருட்கள் விற்றல் ஆகிய தொழில்களை செய்து வருகிறார்கள். சுமார் 50 ஆண்டுகளாக இந்த பகுதியில் வீடு கட்டி வசிக்கும் இவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை.

இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் முறையாக சுத்தம் செய்யப்படாததால் கழிவு நீர் சீராக வெளியேற முடியாமல் ஆங்காங்கே தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளதால் இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மர்மக்காய்ச்சல் பாதிப்புகளும் தீவிரமாக இருக்கிறது.

இந்த பகுதியில் உள்ள 500 வீடுகளில் 200–க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இதுவரை மின் இணைப்பு இல்லை. இதனால் இந்த கிராமமக்கள் இருளில் தவிக்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் சிம்னி விளக்கு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தை நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ–மாணவிகள் இரவு நேரத்தில் சிம்னி விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே படிக்கிறார்கள். இந்த பகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இங்கு வசிப்பவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக காமராஜர் நகரை சேர்ந்த குடியிருப்புவாசிகள், “இந்த குடியிருப்பு பகுதியில் 200–க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. இதனால் மாணவ–மாணவிகள், குழந்தைகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இந்த பகுதியில் மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை வேண்டும். குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி தர வேண்டும். இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் கழிவுநீர் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை அவ்வப்போது சுத்தம் செய்யவும், குப்பைகள் தேங்காமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!