
தமிழகத்தில் போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும் வகையில் 12 புதிய நீர்வழித்தடங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரவித்துள்ளார்.
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் புதிய சரக்கு பெட்டக முனையம் உட்பட 5 திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நீர்வழிப் போக்குவரத்துக்கு முக்கியத்தும் அளிக்கப்படும் என தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் புதிய 12 நீர்வழித்தடங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதிய நீர்வழித் திட்டங்கள் தொடங்கப்பட்டால் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு கப்பல் போக்குவரத்து நிறுவப்படும் என்றும் கட்கரி கூறினார்.
மேலும் தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டு ஆட்டோ மொபைல் துறையில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும், அதே நேரத்தில் எந்தக் காரணத்தைக் கொண்டும் ராமர் பாலம் சேதப்படுத்தப்பட மாட்டாது என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.