"சமாதி நிலைக்கு செல்கிறேன்..! மூச்சு விட மறக்கிறேன்" பகீர் கிளப்பும் நித்யானந்தா..

Published : May 17, 2022, 11:42 AM IST
"சமாதி நிலைக்கு செல்கிறேன்..! மூச்சு விட மறக்கிறேன்" பகீர் கிளப்பும் நித்யானந்தா..

சுருக்கம்

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமம் அமைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்த நித்யானந்தா உடல் நிலை பாதிப்பால் உயிருக்கு போராடி வரும் நிலையில், தனது உடல் நிலை முழுமையாக சோதிக்கப்பட்டு உள்ளதாகவும், உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லையென மருத்துவ அறிக்கை வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இருந்த போதும் தூங்கவும்,  உண்ணவும் முடியவில்லையென தெரிவித்துள்ளார்.

சர்ச்சையும் நித்யானந்தாவும்

உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரமங்களை தொடங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தவர் நித்யானந்தா, திருவண்ணாமலையில் தனது முதல் ஆசிரமத்தை தொடங்கியவர் உலகம் முழுவதும் தனது கிளையை பரப்பினார். நித்யானாந்தவின் பேச்சால் மயங்கி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆசிரமத்திலேயே தங்க தொடங்கினர். இதனால் பல இடங்களிலும் பாலியல் சர்ச்சைகளும் ஆரம்பித்தன.  பிரபல நடிகை உடனான நித்யானந்தாவின் தொடர்பை வீடியோவாக ‌ வெளியிட்ட லெனின் கருப்பன் முதல், மகள்‌களை கடத்தி வைத்திருக்கிறார் என  நித்யானந்தா மீது புகாரளித்த ஜனார்த்தன ஷர்மா வரை அனைவரும் நித்யானந்தாவின்  முன்னாள் சீடர்களே.

கைலாசாவை உருவாக்கிய நித்யானந்தா

தொடர் புகார் காரணமாக சில ஆண்டுகள் தலைமைறைவாக இருந்த நித்யானந்தா, திடீரென கைலாசா என்கிற நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறினார். இந்த நாட்டிற்கு செல்ல இளைஞர்கள் ஆர்வம் காட்டினர். அப்படி பட்ட இடம் எந்த இடத்தில் உள்ளது என்பது கூட தெரியாமல் ரகசியம் காத்து வந்தார். அந்த இடத்தில் இருந்து தினந்தோறும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இந்தநிலையில் கடந்த சில மாதமாக நித்யானந்தா பற்றி எந்த தகவலும் தெரியாத நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு நித்யானந்தா இறந்து விட்டதாக தகவல் பரவியது. இதனை மறுத்த நித்யானந்தா தான் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தன்னை 27 பேர் கொண்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறியிருந்தார். இந்தநிலையில் தற்போது மீண்டும் ஒரு தகவலை தனது அதிகாரப்பூர்வ முகநூலில் வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு புற்று நோய் அல்லது கட்டி எதுவும் இல்லை, இதய பிரச்சினை எதுவும் இல்லை. கொழுப்பு, கல்லீரல் பிரச்சினை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என எந்த பிரச்சினையும் இல்லை என கூறியுள்ளார். 

சமாதி நிலையில் நித்யானந்தா

சிறுநீரகங்கள், நுரையீரல், குடல் சரியாக செயல்படுகிறது. கொரோனா உள்பட வைரஸ் தொடர்பான எந்த நோய்களும் இல்லை. அனைத்து உள் உறுப்புகளும் சரியாக வேலை செய்வதாக தெரிவித்துள்ளார். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்பட அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 
இருந்த போதும்  என்னால் உணவு உட்கொள்ள முடியவில்லை. நான் எந்த உணவையும் வாயில் தள்ள முயன்றால் சில நிமிடங்களில் வாந்தி எடுக்கும் நிலை உள்ளதாகவும்,  இதே போல எனக்கு உறக்கமும் இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். என்னை கவனித்து கொண்டிருக்கும் டாக்டர்கள், சீடர்கள் என்னை கீழே படுக்க வைத்து நன்றாக மூச்சு விடும்படி வற்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்,

நிர்வி கல்ப சமாதியில் நித்யானந்தா

மேலும் உடலில் எந்த அசைவும் நிகழவில்லையென கூறியுள்ளவர், நித்ய சிவ பூஜைக்கு மாறாக நிர்விகல்ப சாமாதியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மனது உலகை மறந்து விட்டதாகவும், 6 மாதமாக உணவும், உறக்கம் இல்லாமல் இருப்பது நிர்வி கல்ப சமாதியில் இருப்பது தனக்கு பலக்கமான ஒன்று என கூறியுள்ளார். எனவே தனக்கு அனைத்து கிரகங்களுப் சாதகமான நிலையில் இருப்பதால் உடல்நிலை பற்றி தனது கவலைப்பட தேவையில்லையென தெரிவித்துள்ளார். மேலும் கைலாசவில் சிறிய அளிவிலான விமானநிலையம் இருப்பதாக தெரிவித்தவர், பெரிய மருத்துவமனைகள் இல்லையென கூறியுள்ளார்.  எனவே எனது மருத்துவ பராமரிப்பிற்காகவோ அல்லது தேவைப்படும் இயந்திரங்களுக்காகவோ எந்த பணத்தையும் அனுப்ப வேண்டாம். என் உடலை கவனித்து கொள்வதற்கு நீங்கள் அனைவரும் ஏற்கனவே போதுமானதைவிட அதிகமாக வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது உடல் நிலை தொடர்பாக அவ்வப்போது முகநூலில் பதிவிடுவதாகவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!