சாலையில் உற்சாகமாக பள்ளி மாணவர்களுடன் நடனமாடிய ஆட்சியர்...!

By vinoth kumar  |  First Published Jan 13, 2019, 11:40 AM IST

சுற்றுலா வரும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஹேப்பி சாலையை திறந்து வைத்த பின் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உதகையில் பள்ளி மாணவிகளுடன் உற்சாகமாக நடனமாடினார்.


சுற்றுலா வரும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஹேப்பி சாலையை திறந்து வைத்த பின் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உதகையில் பள்ளி மாணவிகளுடன் உற்சாகமாக நடனமாடினார்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இன்னும் இரண்டு மாதங்களில் கோடை சீசன் துவங்கவுள்ளதால் உதகைக்கு லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தர உள்ளனர்.

Tap to resize

Latest Videos

 

இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே சுற்றாலா வரும் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக சேரிங்கிராஸ் முதல் கேசினோ ஜங்கசன் வரையுள்ள வர்த்தக சாலையில் மாதந்தோறும் சனிக்கிழமைகளில் ஹேப்பி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. 

அதாவது போக்குவரத்தை ரத்து செய்துவிட்டு சாலையில் நடனமாடுவது, சதுரங்க விளையாட்டு, கேரம், வாலி பால் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாட ஹேப்பி சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு வர்த்தக கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் எதிர்ப்பு வந்தனர். அப்படி இருந்த போதிலும் நேற்று ஹேப்பி சாலையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். திறந்து வைத்த பின்னர் பள்ளி மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நடனமாடி மகிழ்ந்தார்.

click me!