Rain : மக்களே உஷார்.. அடுத்த 4 நாட்களுக்கு மழை அடிச்சு ஊத்தப்போகுது.! வானிலை மையம் அலெர்ட் !

Published : May 31, 2022, 02:43 PM ISTUpdated : May 31, 2022, 02:48 PM IST
Rain : மக்களே உஷார்.. அடுத்த 4 நாட்களுக்கு மழை அடிச்சு ஊத்தப்போகுது.! வானிலை மையம் அலெர்ட் !

சுருக்கம்

Tamilnadu rain : தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவியுள்ளது.

31ஆம் தேதி (இன்று) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

1ஆம் தேதி (நாளை) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 2ஆம் தேதி  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

3ஆம் தேதி மற்றும் 4ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 31ஆம் தேதி தென் கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு, கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் - தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

மாலத்தீவு பகுதிகளில் பலத்தக்காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 1ஆம் தேதி தென் கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு, கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் - தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

2ஆம் தேதி ,முதல் 4ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. 

இதையும் படிங்க : UGC: இந்த பல்கலை., பட்ட படிப்புகள் இனி செல்லாது..’யுஜிசி’ சொன்ன அதிர்ச்சி தகவல் ! மாணவர்கள் கதி ?

இதையும் படிங்க : கணவன் கண்முன்னே கள்ளகாதலனுடன் மனைவி உல்லாசம்.. வாழைத்தோப்பில் கொன்று புதைத்த சம்பவம் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கணவர் ரொம்ப நல்லவர்! என் சாவுக்கு இவங்க தான் காரணம்! 6 மாத குழந்தையுடன் தாய்! கலங்க வைக்கும் கடைசி நிமிடம்!
கூட்டணிக்கு திமுக தலைமை: தொடர்வது நல்லதல்ல..! இடியை இறக்கும் காங்கிரஸ்..!