அடுத்த 25 ஆண்டுகள் கடுமையானதாக இருக்கும்… ஆளுநர் ஆர்.என்.ரவி எச்சரிக்கை!!

By Narendran SFirst Published Nov 25, 2022, 9:23 PM IST
Highlights

அடுத்த 25 ஆண்டுகள் கடுமையானதாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அடுத்த 25 ஆண்டுகள் கடுமையானதாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், இந்தியாவின் பயணத்தில் மாணவர்கள் பங்கு இலக்கை அடைய உந்துகோளாக இருக்க வேண்டும். வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு மாணவர்களாகிய நீங்கள் செல்ல இருக்கிறீர்கள். பேஷன் அல்லது பேஷன் தொழில்நுட்பம் என்பது மனித இன பரிமான வளர்ச்சியில் பங்கு கொண்டது. நாடு முன்னோக்கி செல்கிறது. அடுத்த 25 ஆண்டுகள் கடுமையானதாக இருக்கும். அடுத்த 25 ஆண்டுக்குள் நம் நாடு, இலக்கை அடைந்திருக்க வேண்டும். தன்னிச்சையாக செயல்படும் அளவிற்கு செல்ல வேண்டும்.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்ட மசோதா… ஆளுநர் கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் விளக்கம்!!

நாடு முன்னேற உங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் 18 ஆம் நூற்றாண்டில் நாம் உலகில் ஜவுளித்துறையில் முன்னிலையில் இருந்தோம். இலக்கை நோக்கி நாடு இன்னும் வேகமாக செல்ல வேண்டியுள்ளது. ஆத்ம நிர்பர் பாரத் நோக்கி நாடு செல்கிறது. உடை என்பது அனைவருக்கும் தேவையானது. ரோம பேரரசுக்கு இந்தியாவில் இருந்தது தான் ஆடைகள் சென்றடைந்தன என்பது எத்தனை பேருக்கு தெரியும். ரோமின் பொருளாதாரத்தை எப்படி முன்னேற்றலாம் என அவர்கள் ஆலோசிக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் 20 மில்லியன் தங்கம் ரோம் பெண்களின் ஆடைகளுக்கு செலவிடுகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்… கேம்பஸ் இன்டர்வீயூ-வில் தேர்வு… சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மேலும், Muslin என்ற ஆடை வகை ஆந்திராவில் உள்ள மசூலிப்பட்டினம் என்ற இடத்தின் பெயரிலிருந்து தோன்றியது. இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக நாம் தான் உலக சந்தையில் பெரும் ஆட்டக்காரர்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. அதை மீண்டும் சீர் செய்ய முயன்று வருகிறோம். நாடு என்பது அனைத்திற்கும் மேல் முக்கியமானது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு மாணவர்களாகிய நீங்கள் செல்ல இருக்கிறீர்கள். பேஷன் அல்லது பேஷன் தொழில்நுட்பம் என்பது மனித இன பரிமான வளர்ச்சியில் பங்கு கொண்டது என்று தெரிவித்தார். 

click me!